Tuesday, September 18, 2007

கவிதைகள்

Saturday, September 15, 2007

இன்பம்!

நேற்று ................
யாரோடும் பேசவில்லை,
வேறெதுவும் சிந்திக்கவும் இல்லை,
நீ போனபிறகு।

உன்னோடு பேசியதால்...
எனது நாவிலும்,செவியிலும்,
மூளையிலும் ஊறிய இன்பத்தை
தேக்கி வைப்பதற்காக!
அமுதமாய் நீ.....

அமுதம்
அருந்தியதால்
பசி என்பதே
கிடையாதாம்
தேவர்களுக்கு।

நானும் தேவனா?

உன்னை நினைத்துக்
கொண்டு இருந்தாலே
பசிப்பதே இல்லையே
எனக்கு!

கவிதைகள்

எங்கு செல்வேன்?

அழகைப்பற்றி அழகாய்
இயல்பு மீறுவதே
கவிதை என்றால்...........

இயல்பாகவே இயல்பு
மீறி இருக்கிறதே உன்
அழகு?

எங்கு செல்வேன்
கவிதைக்கு இனி?