Monday, July 16, 2007

கம்யூனிஸ்ட் ஒழுக்கத்தைப் பற்றி....நடேழ்தா குரூப்ஸ்கயா.




ருஷ்யன் லெனினிஸ்ட் யங் கம்யூனிஸ்ட் லீக்கின் ஆறாவது காங்கிரசில் உரையாற்றியது।ஜூலை 12,1924 கம்யூனிசத்தை கட்டுவதற்கான நமது போராட்டத்தையும், நமது சொந்த வாழ்க்கையும், இணைப்பதற்கு நாம் நாம் முயற்சி செய்தாக வேண்டும்।நமது சொந்த வாழ்க்கையை கைவிட்டாக வேண்டும் என்று இதற்கு அர்த்தம் இல்லை।கம்யூனிசத்துக்கான கட்சி என்பது சாமியார்தனமானதல்ல। அத்தகைய தன்மைக்காக வாதாட வேண்டியதில்லை।ஒரு சமயம் ஒரு தொழிற்சாலையில்,தனது சக தொழிலாளர்கள் இடையே பேசிய ஒரு பெண்”உழைக்கும் பெண் தோழர்களே! நீங்கள் கட்சியில் சேர்ந்த உடனே உங்களது கணவனையும், குழந்தையையும்,கைவிட்டுவிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டாக வேண்டும்”என்று பேசியதை கேட்டேன்।இது விசயத்தை அணுகும் முறை இல்லை।இது கணவனையும், குழந்தைகளையும் புறக்கணிக்கிற விசயம் இல்லை।அதற்கு பதிலாக,கம்யூனிசத்துக்கான போராளிகளாக மாறுவதற்கு குழந்தைகளை பயிற்சியளிப்பதாகும்।இப்படி செய்கையில் கணவனும் கூட அப்படிப்பட்ட போராளியாக மாறுகிறார்।சமுதாயத்தின் வாழ்க்கையோடு தன்னுடைய வாழ்க்கையையும் ஒன்றாக கலப்பது எப்படி என்று ஓருவர் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது। இது மதத்தன்மையுள்ள இறுக்கமான கோட்பாடு அல்ல........................................

Sunday, July 15, 2007

1857 புரட்சி பற்றி - மார்க்ஸ் ஏங்கல்ஸ்





கார்ல் மார்க்ஸ் 1853-ம் ஆண்டில், அன்று அமெரிக்காவின் அதிக விற்பனையைக் கொண்டிருந்த செய்திப்பத்திரிகையான ‘நியூயார்க் டெய்லி ட்ரிபியூன்’ ஏட்டின் லண்டன் நிருபராகப் பணியாற்றிய போது, இந்தியாவைப் பற்றி எழுதத் தொடங்கினார்। ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி,’ ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள்’ என்ற, பிற்காலத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இரண்டு கட்டுரைகளில், இந்தியாவின் பழைய சமுதாய முறையையும் பொருளாதாரத்தையும் பிரிட்டிஷ் ஆட்சி எப்படி மூர்க்கமாகச் சீரழித்தது என்பது பற்றியும் அதனால் எப்படி இந்திய மக்கள் சொல்லொனாத் துயரங்ககளுக்கு உள்ளானார்கள் என்பதையும் விவரித்துள்ளார்।அதே நேரத்தில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் நோக்கம் அதுவல்ல என்ற போதிலும் இந்தியாவில் ஒரு புத்தாக்கத்துக்குத் தேவையான அடிப்படை நிலைமைகளை அவர்களது காலனியாதிக்க ஆட்சி இங்கே உருவாக்கிக் கொண்டிருந்தது என்றும் மார்க்ஸ் சுட்டிக் காட்டியுள்ளார்। அவர் தமது இரண்டாவது கட்டுரையில், ‘‘ஆங்கிலேய நுகத்தடியை வீசியெறியக் கூடிய அளவுக்கு இந்தியர்கள் பலம் பெறுவார்கள்,’’ என்று எழுதினார்। ‘‘பிரிட்டிஷ் ராணுவத்தினரால் அணிதிரட்டப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்ட உள்நாட்டுப்படையினர் இந்திய மக்களின் விடுதலை எழுச்சிக்கு ஒரு முன்னோடி அறிகுறியாகத் திகழுவார்கள்,’’ என்றும் அவர் எழுதினார்। எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை முன்னுரைப்பவர் போல அவர் எழுதியது அடுத்த நான்கு ஆண்டுகளில் மெய்யானது।